மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க எடப்பாடி கோரிக்கை

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன், 12ம் தேதி காலை சேலம்  மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாற்றுத் திறனாளி பிரபாகரனின் இறப்புக்கு, தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணமாக வழங்க வேண்டும். தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: