மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணிக்கு வெளிநாட்டு இயந்திரங்கள் கொண்டு வரப்படுகிறது

சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடியில் 118 கி.மீ தொலைவில் அமைய உள்ளது. இதற்காக மண் தர பரிசோதனை முடிவு பெற்று சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2026ம் ஆண்டுக்குள் 2ம் கட்ட திட்டப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 50 நிலையங்கள், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே 12 இடங்களில் பாதை மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர 48 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக சுரங்கம் தோண்டும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட உள்ளது. தற்போது முதல்கட்டமாக 30 நிலையங்கள் இடையே சுரங்கப்பாதை அமைக்க 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக சீனாவில் இருந்து இந்த அதிநவீன இயந்திரங்களை இறக்குமதி செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் ஆய்விற்கு பிறகு இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்படும் என அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: