சென்னையில் இருந்து ரயிலில் துணை ஜனாதிபதி விஜயவாடா பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையை தனது உறவினர்களுடன் கொண்டாடுவதற்காக, இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார். பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடி விட்டு, மீண்டும் அவர் விமானம் மூலம் நேற்று விஜயவாடாவிற்கு செல்ல முடிவு செய்திருந்தார். இந்நிலையில், நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்தது. இதனால், தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வந்தது. எனவே, பாதுகாப்பு கருதி, தனது விமான பயணத்தை தவிர்த்து, ரயிலில் விஜயவாடா செல்ல முடிவு செய்தார். தொடர்ந்து வெங்கய்யா நாயுடு, சென்னை திரிசூலம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து விஜயவாடா செல்லும் ரயிலில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அவரை சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: