முதல்வருக்கு பணியாளர் நல சங்கம் பாராட்டு

சென்னை: தொழில்நுட்பக் கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் மாநில தலைவர்‌ டி.மணிமொழி, பொது செயலாளர் டி.மகிமை தாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு ஒன்றினை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் சட்டமியற்றி, அவ்வாணையத்திற்கு உடனடியாக தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர் செயலர் மற்றும் 5 உறுப்பினர்களை நியமித்தார். ஆனாலும் ஆணையத்திற்கு அலுவலகம் ஒதுக்கவில்லை.  இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையத்துக்கு சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள தாட்கோ தலைமை அலுவலக கட்டிடத்தில், அலுவலகம் அமைக்க உத்தரவிட்டு, அவ்வாணையம் செயற்பாட்டிற்கு வந்தமைக்கு இச்சங்கம் பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறது.

Related Stories: