மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் போக்சோவில் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தை நடத்தி வரும் ஓட்டலில் திருமணமான பிரபு (25) என்பவர் கடந்தாண்டு 6 மாதம் வேலை பார்த்து விட்டு நின்று விட்டார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி மாணவியின் தாய் கர்ப்பப்பை சிகிச்சைக்காக கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த மாணவி கடைக்கு செல்வதற்காக வெளியே வந்தபோது, அங்கு வந்த பிரபு மாணவியை தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அவர் வர மறுத்து வீட்டிற்கு சென்றுள்ளார். பின்தொடர்ந்து சென்ற பிரபு, மாணவியை கட்டாயப்படுத்தி பைக்கில் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல், அடிக்கடி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில் மாணவி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதுகுறித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து இதுகுறித்து, மாணவி பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பிரபுவை நேற்று கைது செய்தார்.

Related Stories: