வருசநாடு அருகே குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

வருசநாடு: வருசநாடு அருகே குண்டும், குழியுமாக உள்ள மலைச்சாலையால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.தேனி மாவட்டம், வருசநாடு அருகே  தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்டு காந்திகிராமம், முத்துநகர் உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மலைச்சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க கோரி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பல முறை தும்மக்குண்டு ஊராட்சி சார்பில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யாமல் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து கிராமவாசிகள் கூறுகையில், ‘‘இப்பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரி, அவரை, எலுமிச்சை, இலவம்பஞ்சு கொட்டை, முந்திரி உள்ளிட்ட பயிர்கள் விளைகின்றன. ஆனால் உரிய சாலை வசதியில்லாததால், தேனி, ஆண்டிபட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. விரைவில் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: