பாரம்பரியமிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் கருப்பாயூரணி கார்த்திக்..!!

மதுரை: உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. 21 காளைகளை அடக்கி கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் முதலிடம் பிடித்தார். கார்த்திக்கிற்கு முதல் பரிசாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்படுகிறது.  கருப்பாயூரணி கார்த்திக் ஏற்கனவே 2019, 2020 ஜல்லிக்கட்டில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை பிடித்து அதே ஊரை சேர்ந்த ராம்குமார் இரண்டாமிடம் பிடித்தார். சித்தாலங்குடியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 13 காளைகளை அடக்கி மூன்றாமிடம் பிடித்தார். 8 சுற்றுகளில் 1020 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.

Related Stories: