இறுதிக்கட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி!: 7வது சுற்று முடிவில் 914 காளைகள் களம் கண்டன..!!

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 914 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 7வது சுற்று முடிவில் வாடிவாசலில் இருந்து மொத்தம் 914 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 6வது சுற்றில் மட்டும் அவிழ்த்துவிடப்பட்ட 157 காளைகளில் 132 காளைகள் வெற்றி பெற்றுள்ளன. மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த மாடுபிடி வீரர் ராம்குமார் 15 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார். கடைசி நேரத்தில் காளைகளை அடக்க காளையர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Stories: