வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு நிறைவு!: 13 காளைகளை அடக்கி முதல் பரிசு பெற்றவருக்கு தங்க மோதிரம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 13 காளைகளை அடக்கி முதல் பரிசு பெற்ற தஞ்சையை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கி 2வது இடம் பிடித்த பள்ளத்துப்பாட்டி சுப்பிரமணியனுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. 9 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்த சூரியர் சிவாவிற்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில்  665 காளைகள் களம் கண்டன.

Related Stories: