‘கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை’தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

நாகர்கோவில்: கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் டிப்ளமோ மாணவி தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின். அவரது மகள் பென்சி (19). தனியார் இன்ஸ்டிடியூட் ஒன்றில் டிப்ளமோ 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் குடும்பத்தினருடன் பேசிக் ெகாண்டு இருந்தார். பின்னர் மாடியில் உள்ள தனது படுக்கை அறைக்கு சென்றார். வழக்கமாக காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பென்சியின் வழக்கம்.

ஆனால் இன்று காலையில் அவர் தனது படுக்கை அறையில் இருந்து எழுந்து வரவில்லை. இதனால் அவரது தாயார் பென்சியை எழுப்ப சென்றார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது பென்சி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறினர். தகவலறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பென்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனியார் இன்ஸ்டிடியூட்டில் கல்வி கட்டணமாக ரூ.30 ஆயிரம் உடனடியாக கட்ட வேண்டும் என கூறி உள்ளனர். ஆனால் தன்னால் உடனடியாக பணம் கட்ட முடியாத நிலை இருப்பதாக பென்சி கூறி வருத்தப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்து அவர் தற்ெகாலை செய்தாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பென்சி தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: