பிப். 14- ல் நடைபெற இருந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பிப்.20- ல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருந்த தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு பதிலாக பேரவை தேர்தல் பிப்ரவரி 20- ல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் மாநில மக்கள் பங்கேற்க எதுவாக தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதியை மாற்ற வேண்டுமென பஞ்சாப் மாநில அனைத்துக்கட்சிகள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Related Stories: