புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை..!!

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இதுகுறித்து தமிழிசை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களது 105வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Related Stories: