சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக புவியரசனுக்கு பதில் செந்தாமரைக்கண்ணன் நியமனம்.!

சென்னை:  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக புவியரசனுக்கு பதில் செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டார். தற்போதைய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக்கண்ணன்  வகித்த காலநிலை மாற்ற மைய சென்னை இயக்குநர் பதவிக்கு புவியரசன் நியமனம் செய்யப்பட்டார். சமீபத்தில் பெரும் மழையின் காரணமாக தமிழகமே வெள்ளக்காடாக மாறிப் போயிருந்தது.  

குறிப்பாக சென்னையில் சில மணி நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது உடன்,  மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.  அத்துடன் ஒரு சில மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இவ்வாறான சூழலில் பெரும் மழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சான்று இருக்கின்றது. உரிய காலத்தில் இந்த மையத்தில் இருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள், மாவட்ட நிர்வாகத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், அதன் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது.  

ஆனால் பெருமழை குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்கவில்லை வழங்க இயலாத நிலை உள்ளது என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி கடிதம் எழுதினார். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுவரை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக புவியரசன் இருந்து வந்த நிலையில்,தற்போது புதிய இயக்குநராக  செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்,செந்தாமரைக்கண்ணன் அவர்கள் வகித்த காலநிலை மாற்ற இயக்குநர் பதவிக்கு புவியரசன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: