சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் 3வது பாடல் வெளியீடு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் 3வது பாடல் வெளியானது.சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கும் படம், ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்குகிறார். சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சூரி, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், புகழ் உள்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் செய்கிறார். இப்படத்தின் 3வது பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் பாடல் வெளியானது.  இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய ‘வாடா தம்பி’ என்ற பாடலை  இசை அமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத் இணைந்து பாடியிருந்தனர். கிராமத்து இளைஞன் கெட்டப்பில் சூர்யா நடனமாடிய  இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து 2வது பாடல் வெளியிடப்பட்டது. யுகபாரதி எழுதி பிரதீப் குமார், வந்தனா னிவாசன்,  பிருந்தா மாணிக்கவாசகன் இணைந்து பாடிய ‘உள்ளம் உருகுதய்யா’ என்ற பாடல் காட்சியில் சூர்யா முருகன் வேடத்தில் ேதான்றியிருந்தார்.

இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் 3வது பாடல் நேற்று மாலை 6 மணிக்கு ெவளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய ‘சும்மா சுர்ர்ர்ருன்னு’ என்று தொடங்கும் பாடலை அர்மான் மாலிக், நிகிதா காந்தி இணைந்து பாடியுள்ளனர். ஏற்கனவே விஜய் உள்பட சில ஹீரோக்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள சிவகார்த்திகேயன், தற்போது சூர்யா படத்துக்கு பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சூர்யா, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணைந்து இப்பாடலுக்கான லிங்க்கை தங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories: