சொல்லிட்டாங்க...

சமூகத்தில் அமைதி இல்லாமல் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்கள் இயங்க முடியாது. ஒவ்வொரு நாளும் உங்களை சுற்றி வளர்ந்து வரும் இந்த வெறுப்பை சகோதரத்துவத்துடன் முறியடிப்பேன்.

- காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

ஒமிக்ரானை கண்டு யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

- தெலங்கானா கவர்னர் தமிழிசை

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே கெஜ்ரிவால் டெல்லியில்தான் இருக்க வேண்டும். கோவாவில் வீடு வீடாக வாக்கு சேகரிக்கத் தேவையில்லை.

- சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத்

குடியரசு தினத்தில் நடக்கும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசு திடீரென அனுமதி மறுத்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது.

- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Related Stories: