திருப்பதியில் பார்வேட்டை உற்சவம் பஞ்ச ஆயுதங்களுடன் எழுந்தருளிய மலையப்பர்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்றும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவராத்திரி பிரமோற்சவம் முடிந்த அடுத்த நாளும்  மலையப்ப சுவாமி கோயிலில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்திற்கு செல்வார். பின்னர், பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நேற்று பார்வேட்டை உற்சவம் நடந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பார்வேட்டை மண்டபத்திற்கு மலையப்பர் செல்லவில்லை. கோயிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் சிறிய செயற்கை வனம் அமைக்கப்பட்டது. அங்கு மலையப்ப சுவாமி சங்கு, சக்கரம், கத்தி, கதம், வில் உள்ளிட்ட பஞ்ச ஆயுதங்களுடனும், கிருஷ்ணர் மற்றொரு பல்லக்கிலும்  எழுந்தருளினர்.

பின்னர், இருவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, அன்னமாச்சார்யாவின் சங்கீர்த்தனை நடைபெற்றது.  இதையடுத்து, வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் ஈட்டியை ஏந்தியபடி சுவாமியுடன் செயற்கை வனத்தை நோக்கி 3 முறை ஓடிச்சென்று ஈட்டியை எறிந்தார். இதில், கூடுதல் செயல் அதிகாரி தர்மா, அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

Related Stories: