பழநி தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் நாளை தேரோட்டம் : பக்தர்களுக்கு அனுமதியில்லை

பழநி : திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த ஆண்டு பழநி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்றும், தேரோட்டம் நாளையும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இன்று திருக்கல்யாணத்திற்கு பிறகு, வெள்ளிரத புறப்பாட்டிற்கு பதிலாக வெள்ளிமயில் வாகனத்தில் சாமி புறப்பாடு கோயில் பணியாளர்களைக் கொண்டு நடத்தப்படும்.  நாளை தைப்பூச நாளன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மாலை 4.45 மணிக்கு சிறிய மரத்தேரில் கோயில் வளாகத்திற்குள் கோயில் பணியாளர்களைக் கொண்டு  தேரோட்டம் நடத்தப்பட உள்ளது. 21ம் தேதி தெப்ப உற்சவம் கோயில் வளாகத்திற்குள் நடைபெறும். இதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிகழ்ச்சிகள் கோயில் வலைத்தளம் மற்றும் யூடியூப் சேனல்களின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமென கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: