×

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் இன்று முதல் 2 நாள் உற்பத்தி நிறுத்தம்

திருப்பூர் : நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் இன்று முதல் 2 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது.பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளான நூல் விலையை பொறுத்தே ஆடைகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் ஆடை தயாரிப்பாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக நூல் விலை எதிர்பாராத அளவிற்கு உயர்ந்து வருவதால், தொழில்துறையினர் பலரும் ஆர்டர்களை முடிக்க முடியாமலும், புதிய ஆர்டர்களுக்கு ஒப்பந்தம் செய்ய முடியாமலும் தவித்து வருகிறார்கள்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நூல் விலை கிலோவுக்கு ₹50 வரை உயர்ந்தது. கடந்த மாதம் கிலோவுக்கு ₹30 வரை நூல் விலை உயர்ந்தது. இந்த நூல் விலை உயர்வை கண்டித்து இன்று (17ம் தேதி) மற்றும் நாளை (18ம் தேதி) திருப்பூர் பனியன் நிறுவனங்களில் உற்பத்தியை நிறுத்தி தொழில்துறையினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம்  தெரிவித்தார்.

இதற்கு சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்) உள்பட பல சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்றும், நாளையும் நடக்கும் 2 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடர்பாக சுவரொட்டிகளும் மாநகர பகுதிகளில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.


Tags : Tirupur Banyan , Tirupur,production Stopped,Thread price
× RELATED முசிறி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை