சந்தேகத்தால் மனைவியை குத்திய கணவன் கைது

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49வது பிளாக் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (50), பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவரது மனைவி இந்திராணி (45). இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில், அதே பகுதியில் இந்திராணி நடத்திவரும் தையல் கடைக்குச் சென்று பிரபாகரன் அவருடன் சண்டையிட்டு உள்ளார். வாக்குவாதம் முற்றி, மது போதையில் இருந்த பிரபாகரன், அங்கு இருந்த கத்தரிக்கோலை எடுத்து இந்திரானியின் காதில் ஓங்கி குத்தினான். இந்திராணி சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்ததால் பயந்துபோன பிரபாகரன் போலீசில் சரணடைந்தார்.

Related Stories: