பூட்டிய வீட்டில் 16 சவரன், பணம் கொள்ளை

வேளச்சேரி, திரெளபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வமாரி(40). இவர், கடந்த 2 தினங்களுக்கு முன், பொங்கல் கொண்டாட, குடும்பத்தோடு திருநெல்வேலிக்கு சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த, 16 சவரன் மற்றும் ₹ 10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து போனதைகண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனே, இதுகுறித்து, வேளச்சேரி போலீசில், அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: