முதியவருக்கு கத்தி குத்து

சென்னை திருமங்கலம் பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(55) இவர் கடந்த 14ம் தேதி பாடி குப்பம் வழியாக தனது காரில் சென்றார்.  அப்போது அவ்வழியாக வந்த வாலிபர், காரை சேதப்படுத்த முயன்றார். இதை  ஆறுமுகம் தட்டிகேட்டபோது, ஆத்திரமடைந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சரமாரியாக முதியவரை குத்திவிட்டு, தப்பியோடினார்.  இப்புகாரின்பேரில் வழக்கு பதிந்த திருமங்கலம் போலீசார், பாடிகுப்பம் பகுதியில் பதுங்கி சுந்தர்(25) என்பவரை நேற்று முன்தினம் இரவு  கைது செய்தனர்.

Related Stories: