சென்னை : சென்னை விருகம்பாக்கம் சின்மையா நகர், சித்திரை தெருவை சேர்ந்தவர் நடராஜன்(64). இவர் கடந்த 29ம் தேதி மதியம் அவரது வீட்டின் அருகே உள்ள காளியம்மன் கோயில் தெருவில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, கடைக்கு பால் பாக்கெட் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கில் வைத்திருந்த ரூ.1.28 லட்சம், 2 கிராம் தங்க நகை மாயமாகி இருந்தது.