×

₹1.28 லட்சத்தை கொள்ளையடித்தவன் சிக்கினான்

சென்னை : சென்னை விருகம்பாக்கம் சின்மையா நகர், சித்திரை தெருவை சேர்ந்தவர் நடராஜன்(64). இவர் கடந்த 29ம் தேதி மதியம் அவரது வீட்டின் அருகே உள்ள காளியம்மன் கோயில் தெருவில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, கடைக்கு பால் பாக்கெட் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கில் வைத்திருந்த ரூ.1.28 லட்சம், 2 கிராம் தங்க நகை மாயமாகி இருந்தது.

இது குறித்து அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் கொள்ளையன் வில்லிவாக்கம் ராஜமங்கலம் 4வது ெதருவை சேர்ந்த பிரபல கொள்ளையன் சரவணராஜ்(46) என தெரியவந்தது. போலீசார் நேற்று முன்தினம் சரவணராஜை கைது செய்தனர். அவனிடம் இருந்து பணத்தை மீட்டனர்.


Tags : Arrested, robbery
× RELATED சிங்கம்புணரி ஒன்றியத்தில் 1.28 லட்சம் பனை விதைகள் நடும் பணி