×

குட்கா விற்ற 17 பேர் கைது

சென்னை : சென்னை முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் நடத்திய அதிரடி சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் அதிகளவில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில்,கடந்த 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்திய அதிரடி சோதனையில் சங்கர் நகர் காவல் எல்லையில் தடையை மீறி குட்கா பதுக்கி விற்பனை செய்து வந்த பம்மல் பகுதியை சேர்ந்த ராஜராஜன்(49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ ஹான்ஸ், எம்.டி.எம், விமல், கூலிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் சென்னையில் நடத்திய அதிரடி சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து 24.4 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் மற்றும் ரூ.14,310 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Gutkha, chennai,
× RELATED கோட்ட அளவில் மே 17ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்