சென்னையில் கஞ்சா விற்பனை ஆந்திர கஞ்சா பெண் வியாபாரிகள் உட்பட 12 பேர் கைது : 166 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை : சென்னையில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டார். அந்த வகையில், ராயபுரம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த நெக்க ரமணன்(33), ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா பகுதியை சேர்ந்த சத்யவதி(32), சென்னை புழல் திருநின்ற நகர் 2வது தெருவை சேர்ந்த மூவேந்தன்(29), தண்டையார் பேட்டை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(42), சூர்யா(29) ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  இதேபோல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: