கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்க வேண்டும்

சென்னை : தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள்  சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி வெளியிட்ட அறிக்கை:  அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது. தற்போது பெற்று வரும் 17 %, 31 % அகவிலைப்படி 1.1.2022ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இம்மாதத்திலிருந்து அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படியும் சங்க நியாயவிலை கடை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கும் 28 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும். இதனால், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 3 %அகவிலைப்படி வித்தியாச குறைவினை நேர் செய்து அரசு ஊழியர்களை போல் கூட்டுறவு பணியாளர்களுக்கும் 31 சதவீதம் ஒரே மாதிரியான அகவிலைப்படியினை வழங்க வேண்டும்.

Related Stories: