பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது

*முழு ஊரடங்கால் ஆட்டோ, டாக்சி கிடைக்காமல் மக்கள் தவிப்பு

சென்னை : பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள் நேற்று சென்னை திரும்பியதால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நேற்று முழு ஊரடங்கின் காரணமாக ஆட்டோ, டாக்சி ஓடாததால் பயணிகள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா போன்ற பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட ரயில்களும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை போன்ற பகுதிகளுக்கும் தினம் 20க்கும் மேற்ப்பட்ட ரயில்கள் இயக்கப் பட்டு வருகிறது.

 இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களே அவர்கள் பொங்கல் பண்டிகையை தங்களுடைய ஊர்களில், குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வது வழக்குமாகும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முன் கூட்டியே ரயிலில் முன்பதிவு செய்து குடும்பத்துடன் புறப்பட்டு சென்று விடுவார்கள். அதன்படி கடந்த 13, 14, 15, 16ம் தேதி வரை விடுமுறை இருந்தால் கடந்த 12ம் தேதியே சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களுடைய ஊர்களுக்கு புறப்பட்டு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிந்ததால் ஏற்கனவே ரயில்களில் சென்னைக்கு வர முன்பதிவு செய்தவர்கள் வழக்கம் போல் தென்மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு சென்னைக்கு நேற்று காலை முதலே வரத் தொடங்கினர். இதனால் நேற்று தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் நேற்று முழு ஊரடங்கு என்பதால் ஆட்டோக்கள், பேருந்துகள், வாடகை கார்கள் இயக்கப்படாததால் ரயில் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தங்களுடைய உறவினர்களை வீடுகளில் இருந்து பைக், கார்களை எடுத்து வரச்சொல்லி அவர்கள் வந்தவுடன் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Stories: