நெல்லை மாநகரில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

நெல்லை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை மாநகர துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார்(கிழக்கு), சுரேஷ்குமார்(மேற்கு) ஆகியோர் உத்தரவுப்படி, பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் போலீஸ் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி உதவி கமிஷனர்கள் முறையே பாளை பாலச்சந்திரன், டவுன் விஜயகுமார், நெல்லை சந்திப்பு அண்ணாத்துரை, மேலப்பாளையம் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் மாநகர பகுதிகளில் உள்ள 8 காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனை உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகர பகுதிகளில் கேடிசிநகர், டக்கரம்மாள்புரம், வி.எம்.சத்திரம், பேட்டை ஜடிஜ, பழைபேட்டை, கருங்குளம், சுப்புராஜ்மில் ஆகிய 7 செக்போஸ்ட்கள் மற்றும் நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை ரவுண்டானா, டவுன், தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளை, ைஹகிரவுண்ட், சாந்திநகர் உள்ளிட்ட 14 மாநகர பகுதிகளிலும் கூடுதலாக செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தினர். இதில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200ம், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.100ம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: