கண்ணாடி மாளிகையில் பால்சம் மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்து

ஊட்டி: மலர்  கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில்,  கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பால்சம் மலர் அலங்காரங்கம் சுற்றுலா  பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா  பயணிகள் வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில்  பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, கோடை காலங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதனால், தோட்டக்கலைத்துறை ஆண்டு தோறும் மே மாதம்  இப்பூங்காவில் மலர் கண்காட்சி நடத்துகிறது. இந்த மலர் கண்காட்சியை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது மலர்  கண்காட்சிக்காக பூங்காவினை தயார் செய்யும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. ஆர்வத்துடன் வரும்  சுற்றுலா பயணிகள் மலர்கள் இல்லாத பூங்காவை பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர்.  

அதே சமயம் பால்சம் மலர் தொட்டிகளை கண்ணாடி மாளிகையில் உள்ள அலங்கார மாடத்தில் வைத்துள்ளது. இவ்வகை மலர்களே கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரகத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளது. பூங்காவில் மலர்களை காண முடியாத  சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசிப்பது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

Related Stories: