பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்க 8 இருக்கை கார்களில் 6 ஏர்பேக் கட்டாயம்

புதுடெல்லி : எட்டு இருக்கைகள் கொண்ட கார்களில் வரும் அக்டோபர் முதல் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகள் அமைக்கப்படுவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கி உள்ளது.கார்களில் பயணிக்க கூடியவர்களின் பாதுகாப்பு கருதி, 2019ம் ஆண்டு டிரைவர் இருக்கைக்கு முன்பு ஏர்பேக் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது. பின்னர், இந்தாண்டு ஜனவரி 1 முதல் டிரைவர் அருகே முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவருக்கும் ஏர்பேக்கை கட்டாயமாக்கி, சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், இச்சட்டத்தை ஒன்றிய அரசு விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, ஒன்றிய மோட்டார் வாகன விதிகளில் (1989) திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டத்தை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், ‘8 இருக்கைகள் கொண்ட கார்களில் ஓட்டுநர், பக்கத்தில் அமர்ந்திப்போர், பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், 6 ஏர்பேக்குகள் பொருத்துவது கட்டாயம்,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் இந்தாண்டு அக்டோபர் முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள டிவிட்டர்  பதிவில்,  ‘கூடுதல் ஏர்பேக் காரணமாக காரின் விலை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிகரிக்கக்கூடும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: