தண்டவாளத்தில் சிமென்ட் தூண் பெரும் விபத்தில் இருந்து தப்பியது ராஜதானி ரயில்

அகமதாபாத் : தண்டவாளத்தில் சிமென்ட் தூணை வைத்து, ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்கும் சதியில் இருந்து அதிர்ஷ்டவசமாக மக்கள் தப்பினர். மும்பையில் இருந்து டெல்லி செல்லும் ராஜதானி விரைவு ரயில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.10 மணிக்கு தெற்கு குஜராத்தில் உள்ள வல்சாத் அருகே வந்த போது, தண்டவாளத்தின் குறுக்கே விஷமிகள் சிலரால் வைக்கப்பட்டிருந்த சிெமன்ட் தூண் மீது மோதியது.

இதில், சிமென்ட் தூண் உடைந்து தண்டவாளத்தில் இருந்து கீழே விழுந்தது. இச்சம்பவத்தால் ரயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அது தொடர்ந்து இயங்கியது. இதனால், ரயிலுக்கோ, பயணிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்பட்டவில்லை. இச்சம்பவம் குறித்து ரயிலின் டிரைவர் அருகிலுள்ள ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் அளித்தார். உடனே, ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும்  சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ரயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தின் குறுக்கே விஷமிகள் சிமென்ட் தூணை போட்டுள்ளனர். சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் பிகானிர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 9 பேர் பலியான நிலையில், இந்த ரயில் கவிழ்ப்பு சதி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: