சில்லி பாயிண்ட்

*  இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள கோஹ்லிக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, முன்னாள் நட்சத்திரங்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், வீரேந்திர சேவக், யுவராஜ் சிங் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

*  ஜோகோவிச் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் ஆஸ்திரேலியன் ஓபன் மிகச் சிறந்த டென்னிஸ் தொடராக இருக்கும் என்று ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் கூறியுள்ளார்.

*  ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடி வரும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியின் கேப்டன் அரிந்தம் பட்டாச்சார்யா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். நடப்பு சீசனில் இதுவரை 11 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 6 புள்ளிகள் மட்டுமே பெற்று (6 டிரா, 5 தோல்வி) கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீராங்கனைகள், நியூசிலாந்து செல்வதற்கு முன்பாக மும்பையில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

* வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. வெ.இண்டீஸ் யு-19 அணி 40.1 ஓவரில் 169 ரன்னுக்கு ஆல் அவுட். ஆஸி. யு-19 அணி 44.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன். 2வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 40 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வென்றது.

Related Stories: