அமெரிக்காவின் தடைக்கு பதிலடி ரயிலில் இருந்து ஏவுகணை: மிரட்டுகிறது வடகொரியா

*ஒரே மாதத்தில் 3வது முறை

சியோல் : அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா நேற்று ரயிலில் இருந்து 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனைகளை நடத்தியது. ஐநா அமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடைகளையும் பொருட்படுத்தாது வடகொரியா ஏவுகணை, அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

கொரோனா தொற்று, பொருளாதாரத் தடைகள், அதிபர் கிம் ஜாங் உன்னின் நிர்வாக தவறுகளினால் வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், ஏவுகணை சோதனையை வடகொரியா நிறுத்தவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நடத்திய 2 ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியாவின் மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால், இதற்கு சவால் விடும் வகையில் நேற்று முன்தினமும் வடகொரியா அடுத்தடுத்து 2 குறுகிய தூர ஏவுகணைகளை ரயிலில் இருந்து ஏவி சோதனை செய்தது.

தென்கொரியாவின் நிலப்பகுதியில் 430 கிமீ தூரத்தை 36 கிமீ உயரத்தில் 2 ஏவுகணைகள் 11 நிமிடங்களில் கடந்து சென்று, கடலில் இருந்த இலக்கை தகர்த்தன. இது, இந்த மாதத்தில் நடத்தப்படும் 3வது சோதனையாகும். ஏற்கனவே, கடந்த 5ம் தேதி தொலைதூர ஏவுகணை, கடந்த 11ம் தேதி ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது.

Related Stories: