தடுப்பு சுவரில் ஆட்டோ மோதியதில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த டி.வி மெக்கானிக் பரிதாப பலி

சென்னை : வில்லிவாக்கம், திரு நகர், 15வது தெருவை சேர்ந்த டி.வி மெக்கானிக் பாக்யராஜ் (43), கடந்த 2 நாட்களுக்கு முன், பாடியில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். இந்த ஆட்டோவை வில்லிவாக்கம், அகத்தியர் நகரை சேர்ந்த பிரபாகரன் (38), போதையில் ஓட்டி உள்ளார். பாடி மேம்பாலத்தில் ஆட்டோ சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, மேம்பால தடுப்பு சுவர் மீது மோதியது.  இதில் ஆட்டோவில் பயணம் செய்த பாக்கியராஜ், மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

Related Stories: