×

2021-22ம் நிதியாண்டில் 2,149 பெண்களுக்கு திருமண நிதியுதவி: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தை சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,  ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 100 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயங்களை நேற்று வழங்கினார்.

இந்த திட்டத்தின் கீழ், 2021-22ம் நிதியாண்டில் சென்னை மாவட்டத்தில் பட்டம், பட்டயப்படிப்பு படித்த 2,149 பெண்களுக்கு ரூ.50,000 வீதம் ரூ.10.75 கோடி திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம், பட்டம், பட்டயப்படிப்பு அல்லாத 751 பெண்களுக்கு ரூ.25,000 வீதம் ரூ.1.88 கோடி திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) மனிஷ், மாநகர மருத்துவ அலுவலர் ஹேமலதா, குழந்தைகள் நல இணை இயக்குநர் சுந்தரி, மாவட்ட சமூக நல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Fiscal year, woman, wedding sponsorship, collector,
× RELATED 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு...