×

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிரான்கோ முலக்கல் விடுதலை

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிரான்கோ முலக்கல் விடுதலை செய்யப்பட்டார். அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் பிரான்கோ விடுவிக்கப்படுவதாக கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் பாதிரியார் பிரான்கோ முல்லக்கல். இவருடன் பணியாற்றிய கன்னியாஸ்திரியை 2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 2018ல் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிரியாரை சிறையில் அடைத்தனர். மேலும் இவரை பாதிரியார் பொறுப்பில் வாடிகன் போப் நீக்கி உத்தரவிட்டார்.


இதனை தொடர்ந்து இவர் ஜாமினில் வெளியே இருந்து வந்தார். கோட்டயம் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் 2019ல் துவங்கிய விசாரணை தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபக்குமார் போதிய ஆதாரங்கள் இல்லாததால், பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் விடுவிப்பதாக தீர்ப்பு வழங்கினார். இதனை நீதிபதி ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் வாசித்தார். இந்த தீர்ப்பையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Archbishop ,Franco Mulakkal , Nun, rape case, arrest, Archbishop Franco Mulakkal, release
× RELATED கன்னியாஸ்த்திரி பலாத்கார வழக்கில்...