×

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2022-23-ம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31-ம் தேதி முதல் ஏப்.8-ம் தேதி வரை 2
கட்டங்களாக நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்ட  பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31-ம் தேதி தொடங்கி பிப்.11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்டம் மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்.8-ம் தேதி வரை நடைபெறும் என ஒன்றிய அரசு தெரிவித்துளளது.


Tags : United Kingdom ,Parliament , Parliament, Budget Session, United States Government
× RELATED சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான...