×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3 சுற்றுகள் நிறைவு: 229 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 22 பேர் காயம்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3 சுற்றுகள்  நிறைவடைந்துள்ளது. 3-ம் சுற்று நிறைவடைந்த நிலையில் மொத்தம் 229 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 3-ம் சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என 22 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்த மாடுபிடி  வீரர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படுகிறது.

3-ம் சுற்று முடிவில் 15 காளைகளை அடக்கி முருகன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். கார்த்தி என்பவர் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்துள்ளார். மாடு முட்டியதில் படுகாயமடைந்த 8 மாடுபிடி வீரர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 சுற்றுகள் முடிவில் 15 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த முருகன் மாடு முட்டியதில் காயமடைந்துள்ளார். மாடு முட்டியதில் வலது கண்ணில் காயமடைந்த முருகனுக்கு தற்காலிகமாக சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Avaniapuram ,Jalicut , Avanyapuram, Jallikattu, bulls, injury
× RELATED அவனியாபுரத்தில் சோபா கம்பெனியில் தீ...