தங்கம் சவரனுக்கு ரூ.144 குறைந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த 4 மாதத்திற்கும் மேலாக அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,492க்கும், சவரன் ரூ.35,936க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.18 குறைந்து ஒரு கிராம் ரூ.4,474க்கும், சவரனுக்கு ரூ.144 குறைந்து ஒரு சவரன் ரூ.35,792க்கும் விற்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை பொங்கல் திருநாள் மற்றும் முகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது விசேஷ தினங்களில் நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: