தங்கம் விலை திடீர் சரிவு: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,776க்கு விற்பனை..இல்லத்தரசிகள் உற்சாகம்..!!

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா, ஒமிக்ரான் தொற்று போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த விலை உயர்வு பிரச்சினையும் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில், ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 160 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,472 ரூபாய்க்கும், ஒரு சவரன் 35,776 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் 8 கிராம் 38,704 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.64.60 ஆக இருந்தது. இன்று அது ரூ.64.30 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நாட்களின் தங்கத்தின் விலை சரிந்திருப்பது இல்லத்தரசிகளை குதூகலமடைய செய்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: