காய்கறி பொங்கல்

செய்முறை

Advertising
Advertising

முதலில் அரிசி, பாசிப்பருப்பை ஒன்றாக கழுவி, பானையில் ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேர்க்கவும். இதை மிதமான தீயில் நன்றாக வேக விடவும். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேக விடவும். தொடர்ந்து பல்லாரி, தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்கவும். அதன் பின் நெய், எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்து, வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி காய்கறிக்கலவையைச் சேர்க்கவும். சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கி காய் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும்.காய்கறி பொங்கல் ரெடி.