உக்காரை

செய்முறை

வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்து தனித்தனியாக நீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் இரண்டையும் தனித்தனியாக கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதினை இட்லித்தட்டில் ஆவியில் 10 நிமிடம் வேக விடவும். வெந்ததை மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றவும். வெந்த மாவு உதிர் உதிராக ஆகிவிடும். வாணலியில் வெல்லத்தினைச் சேர்த்து நீர் ஊற்றி ஒரு கம்பிப் பதம் பாகு வைத்து 2 டேபிள் ஸ்பூன் நெய்யில் தேங்காய்த் துருவலை வதக்கி கொதிக்கும் பாகில் சேர்த்து ஏலப்பொடி சேர்த்து மீதியுள்ள 1 டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரிப்பருப்பினை வறுத்துச் சேர்த்த உதிர்த்த மாவினைச் சேர்த்துக் கிளறி இறக்கி மூடி வைக்கவும். பத்து நிமிடம் எல்லாமாகச் சேர்ந்து ஊறி உதிர் உதிரான புட்டு தயார்.

Tags :
× RELATED மட்டன் வறுத்த கறி