சுகர் குக்கீஸ்

செய்முறை

மைதாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கலந்து சலிக்கவும். ஐஸிங் சர்க்கரையையும், வெண்ணெயையும் சேர்த்து நன்றாக நுரைக்க அடிக்கவும். இதில் வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். இக்கலவையில் தண்ணீர் சேர்த்து கலந்து மைதா கலவையை சிறிது சிறிதாக சேர்க்கவும். மாவை பதமாக பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சுற்றி ஃப்ரிட்ஜ்ஜில் 1/4 மணி நேரம் வைத்தெடுத்து 1/4 இன்ச் கனத்திற்கு திரட்டி பிஸ்கெட் கட்டரால் செவ்வக வடிவமாக வெட்டி அதன் மேல் சர்க்கரை தூவி 1800C சூட்டில் 10 நிமிடங்கள் பேக் செய்யவும். இதனுடன் முந்திரி அல்லது பாதாம் பொடியாக நறுக்கியதை சேர்த்தும் செய்யலாம்.

Tags :
× RELATED டிரை ப்ரூட்ஸ் பொங்கல்