பக்கோடா மோர் குழம்பு

செய்முறை

பல்லாரியை பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பு, தனியாவை ஊற வைத்து, அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல், மிளகாய் வற்றல், சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். மோரை கடைந்து அதனுடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும். கடலைமாவில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் தூள் சேர்த்துக் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், மாவை பக்கோடா சைஸில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

மோர்க்கலவையை பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பொரித்தெடுக்கும் பக்கோடாக்களைக் குழம்பில் சேர்த்து விடவும். பால் போல் நுரைத்து வரும்போது தீயை குறைத்து 2 நிமிடம் வைத்திருந்து, கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள் தாளித்து மூடி வைக்கவும். குழம்பு தயாரானவுடன் இறக்கி சூடாக பறிமாறவும்.
சுவையான பக்கோடா மோர் குழம்பு ரெடி.

Tags :
× RELATED சீரக சாதம்