×

மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி

நன்றி குங்குமம் தோழி

‘களகாத்த சந்தனமரம்....’ என்ற பாடல் கேரளாவில் சமீபத்தில் சமூகவலைத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரித்விராஜ், பிஜூ மோகன்  நடிப்பில் உருவாகி உள்ள மலையாள படமான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற இந்தப் படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. வாழ்க்கை  தத்துவத்தை இயல்பாக சொல்லும் ‘களகாத்த சந்தனமரம்...’ பாடலை யுடியூப்பில் மட்டும் 40 லட்சம் பேர் விரும்பி கேட்டுள்ளனர். 1.5 லட்சத்திற்கும்  அதிகமான பேர் லைக்ஸ் செய்துள்ளனர். இந்த பாடலை இயற்றி சொந்தக் குரலில் பாடியிருப்பவர் கேரளாவின் அட்டப்பாடி பகுதியில் வசிக்கும் தமிழ்  மூதாட்டி நஞ்சம்மா. திரையுலகுக்கு புதுமுகமான இவரிடம்  உங்களுடன் படத்தில் நடித்தவர்கள் யார்? என்ன படத்தில் பாடி நடித்துள்ளீர்கள் என்று  கேட்டால் ‘‘அதெல்லாம் எனக்கு தெரியாது. கிராமிய பாடல்களை பாடுவது மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் யார் எங்கு பாட கூப்பிட்டாலும்  கால, நேரம் பார்க்காமல் அவர்களுடன் கிளம்பிவிடுவேன்’’ என்கிறார்.

கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக பாடி வரும் நஞ்சம்மாவிற்கு திடீர் என படத்தில் பாட கிடைத்த வாய்ப்பு பலருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.  திரைத் துறையில் புகழ் வெளிச்சம் பெறப் போராடிய காலம் மாறி இன்று எத்தனை வயதானாலும், குறைகளை மறந்து தடைகளை உடைத்து சாதிக்க  முடியும் என்பதற்கு இவரே உதாரணம். மலைவாழ் இனத்தை சேர்ந்த இவர்  அந்த படத்திலும் மலைவாழ் பெண்ணாகவே நடித்து அசத்தியுள்ளார்.   மலையாள திரையுலகமும், ஊடகங்களும் அவரை பாராட்டி வரும் நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயனும் நஞ்சம்மாவுக்கு சிறந்த கிராமிய  பாடலுக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : Tamil ,
× RELATED சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அரசுக்கு பாரதிராஜா கோரிக்கை