×

துலிப் மலர்கள் பூத்துக்குலுங்கும் மொகல் தோட்டம்

நன்றி குங்குமம் தோழி

நேரு, பிரணாப் முகர்ஜி, அன்னை தெரசா,  ஜான் என் கென்னடி, குயின் எலிசபெத் என்ற பெயரிடப்பட்ட  ரோஜாக்களை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதை பார்க்க ஆசையா? வாங்க! ஜனாதிபதி மாளிகைக்கு. தில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மொகல் தோட்டம்  கொள்ளை அழகு வாய்ந்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பொதுமக்கள் இதை பார்வையிட முடியும். “உத்யனோத்சவ்’  என்ற இந்த நிகழ்வை ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் கடந்த 4ம் தேதி தொடங்கி வைத்தார். பிப்ரவரி 5  முதல் மொகல் கார்டனைக் காண பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்த மொகல் தோட்டம் பார்வையாளர்களுக்கு மார்ச் 8ம் தேதி வரை திறக்கப்பட்டு இருக்கும். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் இந்த தோட்டத்தின் அழகை கண்கூடாக கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தத் தோட்டத்தை பார்வையிடுவதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.

தோட்டத்தில் பல்வேறு வகை உள்நாட்டு பூக்கள், அயல்நாட்டுப் பூக்கள் ஆகியவற்றுடன் பல்வேறு நிறங்களில் பத்தாயிரத்திற்கு மேல் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ரோஜாக்கள், டாலியா, காலண்டுலா, ஜெர்டிநரா, லினாரியா, லார்க்ஸ்புர், கஸ்னியா, வெர்பெனா, வியோலா, பான்சி கார்னேசன், கிரைசாந்தமம், மேரிகோல்டு, சால்வியா போன்ற மலர்கள் பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. குறிப்பாக இது தவிர மலர்களால் செய்யப்படும் விரிப்பு அலங்காரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காற்று மாசுவை  சுத்திகரிக்கும் தாவரங்களும் இங்கு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இது தவிர கறுப்பு, நீலம் ஆகிய அரிய நிறங்களை உடைய 138 வகையான ரோஜாக்களையும் பார்க்கலாம். மேலும் பல்வேறு பருவ காலங்களில் மலரும் 70 வகையான மலர்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 5.25 லட்சம் பேர் இந்தத் தோட்டத்தைப் பார்வையிட்டு இருப்பதாக கருத்துக்கணிப்பில் கண்டறிந்துள்ளனர்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : Mughal Garden ,
× RELATED ஜனாதிபதி மாளிகை முகல் கார்டன் இன்று முதல் திறப்பு