×

உடல் பருமனும் மகளிர் நலமும்

Dr. S. Saravanakumar, Hernia and Obesity Specialist Surgeon, GEM Hospital, Coimbatore

பெண்களின் ஆரோக்கியம் என்பது, ஆரோக்கியமான நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. மருத்துவ, உளவியல் மற்றும் பொருளாதார காரணிகள் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. அதிலும் குறிப்பாக உடல் பருமன், பெண்களின் கருப்பை ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது.

உடல் பருமனும், PCOD-யும்  எவ்வாறு தொடர்புடையவை?

தற்போது பெண்களின் குழந்தையின்மைக்கு ஒரு முக்கிய காரணி PCOD ஆகும். ஆய்வுகளின் படி PCOD-யினால் அவதியுறும் பெண்களில் 40- 8௦ % பேர் உடல் பருமனானவர்கள்1. இந்தியாவில் உள்ள பெண்களின் 11.9 % பெண்கள் PCOD -யினால் பாதிக்கப்பட்டுள்ளனர்2.   PCOD - உள்ள பெண்களுக்கு மெட்டபாலிக் சின்ரோம் ஏற்படக்கூடும்.  மெட்டபாலிக் சின்ரோம் என்பது 2 -ம் வகை டயபடீஸ், இதயநோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரால் போன்ற சில நோய்கள் கூட்டாக வருவதாகும்.  இந்த நோயாளிகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது . வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் மட்டும் அதிகபட்ச எடை இருத்தல்,  இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் இன்சுலின் செயல்பாடுகளில் ஏற்படும் தடை மற்றும் மெட்டபாலிக் சின்ரோம் போன்றவை, PCOD- உடன் சேர்ந்து வரக்கூடிய பாதிப்புகள் ஆகும்.  PCOD-கான சிகிச்சை முறைகள் பொதுவாக குறிகுணங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. மேலும் எடை குறைப்பு உணவுமுறைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் போன்ற சிகிச்சைகள் தான் முதல் நிலை சிகிச்சைகள் ஆகும்.

குழந்தையின்மைக்கும் உடல்பருமனுக்கும் தொடர்பு உள்ளதா?

இன்று பலரிடமும் காணப்படும் பிரச்சனை குழந்தையின்மை ஆகும். அது தற்போதய சூழலில் மிகவும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. உடல்பருமன், பெண்களின் கருத்தரிக்கும் தன்மையை பெரிதும் பாதிக்கிறது. பல்வேறு நவீன கருத்தரித்தல் முறைகள் இருந்தாலும் அவற்றினால் 6௦% - 5௦% தம்பதிகள் மட்டுமே குழந்தை பெற முடிகிறது.

உடல் எடையை குறைப்பதால் குழந்தைபெற முடியுமா?

இங்கிலாந்தின் (NICE) வழிகாட்டுதலின்படி உடல் பருமனான ஒருவர் 10 % எடையை குறைத்தாலே கருத்தரிக்க முடியும்3. எடையை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்தும் குறைக்க முடியாதவர்களுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை உதவியால் அதிகபட்ச எடை குறைவது மட்டுமல்லாமல் மாதவிடாய் கோளாறுகள் சரியாவதோடு எளிதில் கருத்தரிக்க முடிகிறது. அதனால் மகப்பேறு காலத்திலும் குழந்தை ஆரோக்கியத்திலும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையை மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செய்ய முடியுமா ?

IRDAI(Insurance Regulatory and Development Authority of India)- ன் தற்போதய வழிமுறைகளின்படி பேரியாட்ரிக் அல்லது எடைக்குறைப்பு அறுவைசிகிச்சையானது மருத்துவ காப்பிட்டு திட்டங்களின்க்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது உடல்பருமனால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 18  வயதிற்கு மேல் உள்ளவர்கள் பிஎம்ஐ 40 அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள்,  பிஎம்ஐ 35 உடன்  2ம் வகை டயாபடீஸ், சிலீப் ஆப்னியா (OSA) இதயநோய் போன்ற நோய் உள்ளவர்கள் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும். இந்த சிகிச்சை அதற்கான பிரத்யேக அனுபவமுள்ள மருத்துவ குழுவினரால் சரியான மருத்துவ முறைகளின்படி செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: டாக்டர் எஸ்.சரவணகுமார் ஹெர்னியா மற்றும் உடல்பருமன் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர், ஜெம் மருத்துவமனை, கோயம்புத்தூர். Ph: +91 8220885979

1. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3603088/
2. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3603088/
3. Silvestris, E., de Pergola, G., Rosania, R. et al. Obesity as a disruptor of female fertility. Reprod Biol Endocrinol 16, 22 (2018).

https://doi.org/10.1186/s12958-018-0336-z


Tags : Obesity and women well being
× RELATED பெருங்குடி ஜெம் மருத்துவமனை சார்பில்...