கேரட் கோதுமை தோசை

செய்முறை

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவைச் சேர்க்கவும். மிக்ஸியில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, வரமிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை, தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்கவும். அரைத்தவையை கோதுமை மாவுடன் சேர்த்து உப்பு போட்டு கட்டியில்லாமல் மிக்ஸ் செய்யவும். சீரகம், துருவிய கேரட்டை மாவுடன் மிக்ஸ் செய்யவும். தோசைக்கல்லைச் சூடு செய்து கரைத்து வைத்த மாவில் தோசையினை சுட்டு எடுக்கவும்.

குறிப்பு

* மைதா மாவைப் பயன்படுத்த வேண்டாம்.
* கோதுமை மாவுடன் ஒரு மேஜைக்கரண்டி பச்சரிசி மாவைச் சேர்த்தால் தோசை மொறு மொறுன்னு இருக்கும்.

Tags :
× RELATED காளான் முட்டை மசாலா