ராகி ஆலு பராத்தா

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, சோள மாவைச் சேர்க்கவும். போதுமான உப்பைச் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினா, பூண்டு, மஞ்சள் தூளை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை மாவுடன் சேர்க்கவும். சிறுத் துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கை போதுமானத் தண்ணீரைச் சேர்த்து வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

இதனை மாவுடன் சேர்த்து கூடவே சீரகம், வெண்ணெய், பால் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். தேவையெனில் தண்ணீரைச் சேர்த்து கையில் ஒட்டாதவாறுப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சுமார் 10-15 நிமிடங்கள் தனியே வைக்கவும். சற்று தடிமனானச் சப்பாத்தியாக சூடானத் தோசைக் கல்லில் சேர்த்து, தேவையான எண்ணெயை விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும். சுவையான ராகி ஆலு பராத்தா தயார். புளிக்காத தயிருடன் பேக் செய்து தரவும்.

குறிப்பு

* புரதச்சத்து நிறைந்த ராகி குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து ராகியில் உள்ளது. * உருளைக்கிழங்கிற்குப் பதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பயன்படுத்தலாம்

Tags :
× RELATED வெங்காயத்தாள் பொறியல்