உருளை கேரட் பராத்தா

செய்முறை

உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, தோல் உறித்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும். அதே போல் சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட்டை அரைப்பதம் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய மல்லித்தழை, பெரிய வெங்காயம், சீரகத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த கிழங்கு, கேரட்டுடன் அரைத்த கலவையுடன் உப்பு சேர்த்து ஒன்றாக மிக்ஸ் செய்து சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் உருக்கிய வெண்ணெயைச் சேர்த்து, மிருதுவாக மாவைப் பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக்கித் தனியே எடுத்து வைக்கவும். உருண்டைகளை சற்றுத் தடிமனாக வர மாவைச் சேர்த்து வட்டமாத் தேய்க்கவும். அதன் நடுவே உருண்டையை வைக்கவும். சப்பாத்தி மாவின் ஓரங்களை உருண்டையுடன் சேர்த்து மூடிக் கொள்ளவும். அதிகம் அழுத்தாமல் மாவைத் தேய்த்துக் கொள்ளவும். தோசைக் கல்லை சூடு செய்து, தேய்த்த உருண்டையைச் சேர்த்து, போதுமான எண்ணெயைச் சேர்த்து இருபுறமும் திருப்பிச் சுவையான உருளை கேரட் பராத்தாவைச் சுடவும்.

குறிப்பு

* பச்சை மிளகாய்க்குப் பதில் வரமிளகாய்த்தூள் (அ) மிளகுத்தூளைச் சேர்க்கவும். * பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற வைத்து சுட்டால் மிருதுவாக இருக்கும்.

Tags :
× RELATED சிக்கன் செட்டிநாடு